தமிழகத்தில் விதிகளை பின்பற்றாமல் செயல்படும் 71 பி.எட் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து..

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிமுறையை பின்பற்றாத 3 அரசு பி.எட் கல்லூரி உள்பட 40 கல்லூரிகளுக்கு என்சிடிஇ கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பியது.


இதனை தொடர்ந்து விதிகளை மீறி செயல்படும் பி.எட் கல்லூரிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் செயல்படும் 71 பி.எட் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்தால் அதற்குரிய எந்தப் பொறுப்பினையும் கல்வியியல் பல்கலைக்கழகம் ஏற்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற கல்லூரிகளில் தகுதியற்ற பல பேராசிரியர்கள் , பணியாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பல தனியார் கல்லூரிகள் லாப நோக்கில் மாணவர்களுக்கு தரமற்ற கல்வியும் வழங்கியுள்ளது.


அரசு கல்லூரிகளில் என்சிடிஇ விதிப்படி பல ஆண்டுகளாக பேராசிரியர் நியமனம் செய்யாமல் உயர் கல்வித்துறை அலட்சியமாக செயல்பட்டு வந்துள்ளது என குற்றச்சாட்டு வந்ததையடுத்து தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)