போலி ஆவணங்கள் வாயிலாக ரூ. 60 லட்சம் கார் கடன் மோசடி செய்த நபர் கைது

வங்கியில் போலி ஆவணங்கள் வாயிலாக 60 லட்சம் ரூபாய் கார் லோன் மோசடி செய்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.


கொடுங்கையூரை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் தனக்கு தெரிந்த நபர்களை வைத்து அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் கமிஷன் என்று பேசி, அவர்கள் பெயரில் போலியான ஆவணங்களை தயாரித்து அசோக் நகர் சிண்டிகேட் வங்கியில் கடன் வாங்குவதற்காக விண்ணப்பிக்க வைத்துள்ளார்.


அவர்களுக்கு கார் வழங்கக்கூடிய டீலராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, வங்கியில் இருந்து கார் வாங்குவதற்காக அளிக்கப்படும் தொகையை தன்னுடைய வங்கிக் கணக்கிற்கு வருமாறு பார்த்துக் கொண்டுள்ளார்.


இது தொடர்பாக வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் கர்நாடகாவில் தலைமறைவாக இருந்த சதீஷ்குமாரும். போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த சதீஷ் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.


வங்கியின் உதவியின்றி மோசடி நடந்து இருக்குமா என்ற கோணத்தில் வங்கி மேலாளரிடமும் விசாரணை நடக்கிறது.