வங்கி கணக்கில் இருந்து பணத்தை சுருட்டும் சர்வதேச கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது

வங்கி அதிகாரி போல தொலைபேசியில் பேசி வாடிக்கையாளரின் விவரங்களைப் பெற்று அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தைச் சுருட்டும் சர்வதேச கும்பலைச் சேர்ந்த 6 பேரை மும்பை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.


இது குறித்து போலீசார் தரப்பில் விடுக்கப்பட்ட அறிக்கையில் 6 பேரிடமிருந்த லேப்டாப்கள், சட்டவிரோதமாக உருவாக்கப்பட்ட டேட்டா பேஸ்கள், ஸ்மார்ட் போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மலாத் பகுதியில் அவர்களின் தொலைபேசி உரையாடலைக் கேட்ட உளவுத்துறையினர் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த 6 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.கடந்த 11ம் தேதி இரண்டு இடங்களில் போலீசார் அதிரடி சோதனைகளையும் நடத்தினர்