பிரதமர் மோடி 6 முறை விதிகளை மீறியுள்ளார் கேரள அமைச்சர் ஜலீல் அதிரடி குற்றச்சாட்டு

பிரதமர் மோடி 6 முறை புரோட்டாக்கால் விதிமுறைகளை மீறி செயல்பட்டு உள்ளார் என்று கேரள உயர்கல்வித் துறை அமைச்சர் ஜலீல் கூறியது பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது. திருவனந் தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் குரான்கள் வந் தபோது அதனுடன் தங் கம் கடத்தப்பட்டிருக்க லாம் என்று கருதப்படு கிறதுஅமலாக்கத்துறை கிறது.


இதில் தொடர்ப டைய கேரள உயர்கல்வித் துறை அமைச்சர் ஜலீலி டம் அமலாக்கத்துறை மற்றும் என்ஐஏவும் விசா ரணை நடத்தி உள்ளன. இந்த நிலையில் அமைச்சர் ஜலீல் நிருபர் களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறியது: குரான்கள் வந்த பார்சலில் தங்கம் உள்பட வேறு எந்த பொருட்களும் கடத்தப்படவில்லை . முஸ்லீம் லீக் கட்சிதான் தேவையில்லாமல் இந்த பொய் புகாரை கூறி வரு கிறது. ரம்ஜானையொட்டி இலவச பொருட்கள் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதாகவும், அவற் றை கேரளாவில் விநியோ கிக்க முடியுமா? என்று ஐக்கிய அரபு அமீரக தூத ரகத்தில் இருந்து என்னி டம் கேட்டனர். அவர்கள் கேட்டுக்கொண்டதான் நான் நான் செய்தேன்.


இதில் எந்த சட்ட மீறலும் இல்லை . நான் சட்ட விதி முறைகளை மீறியதாக கூறுகின்றனர். ஆனால் பிரதமர் மோடியே பல முறை விதிமுறைகளை மீறி உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் பிரதமரின் பிறந்த நாளுக்காக எந்த முன்னறிவிப்பும் இன்றி அந்த நாட்டுக்கு மோடி சென்றார். 6 முறை இவ் வாறு அவர் சென்றுள் ளார். நாட்டின் சட்டப் படி ஒரு பிரதமர் வெளி நாடு செல்லும் போது நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.


ஆனால் அதை மீறி அவர் வெளி நாட்டுக்கு சென்றார். ஷார்ஜா மன்னர் கேரளா வந்தபோது, 'அமைச்சர் அழைப்பா ளர்' என்ற முறைப்படி அவருடன் இருந்தேன். அப்போது ஐக்கிய அரபு அமீரக துணைத்தூதர் ஜமால் உசேன் அல்சாபி யுடன் பழக்கம் ஏற்பட் டது. அன்றுமுதல் நான் அவருடன் தொடர்பில் இருந்து வருகிறேன்.


தற் போது பிரச்னை ஏற்பட் டதில் இருந்து அவரை நான் தொடர்பு கொள்வ தில்லை. தங்க கடத்தலுக் கும், எனக்கும் எந்த தொ தொடர்பாக யாரிடம் டர்பும் இல்லை . இது இருந்தும் நான் பரிசோ, பணமோ வாங்கவில்லை. என்ஐஏ விசாரணையில் திருப்தி உள்ளது. நான் எந்த தவறும் செய்ய வில்லை . எனவே பதவி விலக வேண்டிய அவசி யம் இல்லை. ஆனால் கட்சி கேட்டுக்கொண் டால் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு