மதுரையில் ரூ. 52 லட்சம் மதிப்பிலான பிரேசில் நாட்டுப் பணத்துடன் சிக்கிய நபரைப் பொறியாகக் கொண்டு அடுத்தடுத்து 9 பேர் கைது

மதுரையில் 52 லட்ச ரூபாய் மதிப்பிலான பிரேசில் நாட்டுப் பணத்துடன் சிக்கிய நபரை பொறியாக வைத்து 9 பேரை போலீசார் கைது செய்தனர்.


மதுரை மாநகருக்குள் வெளிநாட்டுப் பணம் பெருமளவில் கைமாற உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் இறங்கினர்.


ரயில் நிலையம் அடுத்த மீனாட்சி பஜாரில் சந்தேகத்துக்கு இடமான வகையில் கையில் பெட்டியுடன் நின்றிருந்த கருணாமூர்த்தி என்பவனை பரிசோதித்தபோது, பெட்டியில் 52 லட்ச ரூபாய் மதிப்பிலான பிரேசில் நாட்டு பணம் சிக்கியது.


போலீசாரின் முறையான விசாரணையில் அவரிடம் வெளிநாட்டு கரன்சிகளை மாற்றுவதற்கு இன்னும் சிலர் வருவதாக கூறியதன் பேரில் அவரை அந்த இடத்தில் நிறுத்தி போலீசார் கண்காணித்தனர்


அப்போது. அவரிடம் பணம் மாற்ற வந்த ராஜேந்திரன், திருமாவளவன், ராமர், உதயகுமார் , மகாலட்சுமி என்ற பெண் உள்ளிட்ட 10பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா