சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணி பெண்ணை கட்டிலில் வைத்து 5 கி.மீ சுமந்து சென்ற கிராம மக்கள்!

சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணிப் பெண்ணை கட்டிலில் வைத்து சுமார் 5 கிலோ மீட்டர்கள் சுமந்து சென்று கிராம மக்கள் மருத்துவமனையில் சேர்ந்தனர். சட்டீஸ்கர் மாநிலத்தில் ஜஷ்பூரில் ஜப்லா என்ற கிராமம் அமைந்துள்ளது.


இந்த கிராமத்தையும் நகரத்தையும் இணைப்பதறகான முறையான சாலை வசதி இல்லை என கூறப்படுகிறது. இதனால் இக்கிராம மக்கள் அவசர தேவைகளுக்கு உடனடியாக வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் அக்கிராமத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் இங்கு சாலை இல்லாததால் ஆம்புலன்ஸ் வர முடியாத நிலை ஏற்பட்டது.


இதனை அடுத்து ஒரு கட்டிலில் கர்ப்பிணிப் பெண்ணை வைத்து கிராம வாசிகள் சுமார் 5 கிலோ மீட்டர் வரை தூக்கிச் சென்றனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றப்பட்டு அந்த பெண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது குறித்து தெரிவித்துள்ள கிராம வாசிகள், கிராமத்தில் சரியான சாலை இல்லாததால் பஞ்சாயத்து சுகாதார மையம் பெரும்பாலும் ஊழியர்களின் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது.


நோயாளிகளை நாங்கள் கொண்டு செல்ல வேண்டிய சாலைகள் இல்லாததால் வாகனங்கள் எங்கள் கிராமத்திற்குள் நுழைய முடியாது. இந்த விஷயத்தில், ஆம்புலன்ஸ் வரமுடியாததால் அந்த பெண்ணை ஒரு தனியார் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது என தெரிவித்தனர்.


கடந்த காலத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தன, நாங்கள் அதைப் பற்றிய தகவல்களை சேகரித்தோம். இப்பகுதிக்கான இணைப்பை உறுதி செய்வதற்காக இந்த ஆண்டு இறுதிக்குள் சாலையின் பணிகள் நிறைவடையும் என்று பாகிச்சா ஜான்பாட்டின் தலைமை நிர்வாக அதிகாரி வினோத் சிங் தெரிவித்தார்.


Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
‘நீ செத்துப் போ.. நா வீடியோ எடுக்கற’ : மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்ததை வீடியோ எடுத்த கணவன்!!!
Image
சிக்னலில் நின்ற பெண்ணிடம் பணம் கேட்ட திருநங்கை: தர மறுத்ததால் ஆபாச பேச்சு…முகம் சுழிக்க வைத்த செயல்..!!
Image
தி.மு.க மூத்த தலைவரை பொதுவெளியில் விமர்சித்த நிதி அமைச்சர் #PTR - உச்சக்கட்டத்தில் உட்கட்சி பூசல்! https://kathir.news/news/-ptr--1204682
Image
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்பட அவரது ஆதரவாளர்கள் 11 பேர் மீது வழக்கு
Image