புதுவை: ஒரே நாளில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது

புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ் ணாராவ் நிருபர்களிடம் கூறியதாவது: புதுவையில் நேற்று 5 ஆயிரத்து 344 பேருக்கு தொற்று பரிசோதனை நடத் தப்பட்டது. இதில் புதிதாக 492 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பது உறுதி செய் யப்பட்டது.


 இதில் புதுவையில் 397 பேர், காரைக்காலில் 45 பேர், ஏனாமில் 45 பேர், மாகேயில் 5  பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் புவைதுவயில் 353 பேர், காரைக்காலில் 69 பேர், ஏனாமில் 24 பேர், மாகேயில் 16 பேர் என மொத்தம் 462 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


புதுவை மாநிலத்தில் க 21 ஆயிரத்து ஒட்டுமொத்தமாக 21 ஆயிரத்து 913 பேர் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர்.


இதில் 16 ஆயிரத்து 715 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனைவீட்டு தனிமையில் 4 ஆயிரத்து 763 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று புதுவையில் 5 பேர், காரைக்காலில் ஒருவர்


என 6 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி இறந் துள்ளனர். புதுவையில் கொரோ னாவுக்கு பலியானோர் எண் ணிக்கை 437 ஆக உயர்ந் துள்ளது. கடந்த 2 நாட்களாக முதலமைச்சர், வளர்ச்சி ஆணையர், செயலர் ஆகி யோருடன் யார் எந்த வேலை செய்தார்கள்? என்ன பணிகள் நடந்துள்ளது? எதனை மாற்ற வேண்டும்? என ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தப் படுகிறது. ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.


புதுவை மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனாவை தடுக்க முடியும். அதிகபட்சமாக பரி சோதனைகளை நடத்த சுகா தாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு