கடந்த 5 மாதங்களில் போக்குவரத்துத்துறைக்கு ரூ.250 கோடி இழப்பு

அரசு விரைவு பேருந்துகள் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 6 லட்சம் கிலோமீட்டர் தொலைவிற்கு இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கான பயணக் கட்டணத்தின் மூலமாக பயணிகளிடம் இருந்து ஆண்டுக்கு 650 கோடி ரூபாய் வசூலிக்கப்படுகிறது.


ஆனால், அதே ஓராண்டில் அந்த பேருந்துக்கு 1095 கோடி ரூபாய் அளவுக்கு செலவு செய்யப்படுகிறது. வரவை விட கூடுதலாக 450 கோடி ரூபாய் செலவு இருப்பதற்கான காரணமாக ஓட்டுநர், நடத்துநரின் ஊதியம், முன்னாள் ஊழியர்களின் ஓய்வூதியம், பேருந்து பழுதுக்கான செலவுகள், டீசல் செலவு, சுங்கக்கட்டணம், போக்குவரத்து கழகத்திற்காக பெறப்பட்டுள்ள 2,000 கோடிக்கான வட்டித் தொகை போன்றவை கூறப்படுகிறது, படிக்க...


தீபாவளியை முன்னிட்டு முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன: கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க கோரிக்கை இந்த சூழலில்தான் கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி எஸ்.இ.டி.சி. பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கடந்த 7ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது. SETC சார்பில் 1,200 பேருந்துகள் இருந்தாலும், தற்போது 500 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.


ஆனால் 250 பேருந்துகளுக்கு மட்டுமே தேவை இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். இதன்காரணமாக டீசல் போடுவதற்காக ஆகும் செலவு மட்டுமே வரவாக கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.


மாதத்திற்கு 50 கோடி ரூபாய் வரை இழப்பை சந்திப்பதாக தெரிவிக்கும் அதிகாரிகள், பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்த கடந்த 5 மாதங்களில் மட்டும் 250 கோடி ரூபாய் வரை இழப்பை சந்திப்பதாகவும் கூறுகின்றனர்.


மேலும் படிக்க...திரையரங்குகளில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப அனுமதியளிக்க வாய்ப்பு இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ வரும் நாட்களில் அதிக பேருந்து இயக்கப்பட்டாலும் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் எனக்கூறும் அதிகாரிகள் அரசு போக்குவரத்து துறை சேவை துறை ஆக இருப்பதால் இதுபோன்ற சவால்களை எதிர் கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.