சென்னையில் தண்ணீர் லாரி மோதி தாத்தா-பாட்டி கண்முன்னே பலியான 4 வயது சிறுவன்

சென்னை எம்.ஆர்.சி. நகரில் தண்ணீர் லாரி மோதி, பாட்டி மற்றும் உறவினர் கண்முன்னே 4 வயது சிறுவன் பலியானான்.


அங்குள்ள சிக்னல் அருகே காலை 8 மணிக்கு நின்ற 2 இருசக்கர வாகனங்கள் மீது லாரி மோதியது.


இதில் உறவினர் கோபால் , பாட்டி உமாவுடன் இருந்த சிறுவன் பிரனீஸ் சம்பவ இடத்திலேயே பலியானான். கோபால், உமா மற்றும் இன்னொரு வாகனத்தில் இருந்த நபர் ரமேஷ் ஆகியோர் காயமடைந்தனர்.


லாரி மோதியதில் சிக்னல் கம்பங்கள் சாய்ந்தன.விபத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், லாரி டிரைவரான பட்டினபாக்கம் சமீரை போலீசார் கைது செய்தனர்.


விசாரணையில் பிரேக் பிடிக்காததால் கம்பங்களில் மோதி லாரியை நிறுத்த வந்ததாகவும், அப்போது விபத்து நேரிட்டதாகவும் டிரைவர் சமீர் தெரிவித்துள்ளார்.


அதேநேரத்தில் காலை 6 மணி முதல் 11 மணி வரை தண்ணீர் லாரியை இயக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதை மீறி லாரியை இயக்கியதாக குற்றம்சாட்டப்படுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா