நள்ளிரவில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை : ஒருவர் கைது 4 பேரிடம் விசாரணை

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே நள்ளிரவில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவரை கைது செய்த போலீசார் மேலும் 4 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தெற்கு வள்ளியூரை சேர்ந்த முத்துராமன் திமுகவில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்து வந்த நிலையில் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.


நேற்றிரவு காரில் தெற்கு வள்ளியூருக்கு முத்துராமன் வந்து கொண்டிருந்த பொழுது வழியில் திட்டமிட்டு டிரம்களை உருட்டி விட்டிருந்த மர்ம நபர்கள், முத்து ராமன் காரில் இருந்து இறங்கி அதனை அகற்றியபோது வெட்டியுள்ளனர்.


அதில் படுகாயமடைந்த முத்துராமன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.


கொலை நடைபெற்ற இடத்தில் கிடைத்த தடயங்களை கொண்டு விசாரணை மேற்கொண்ட போலீசார், மற்றொரு முத்துராமன் என்பவரை கைது செய்தனர்.


கைதான முத்துராமனுக்கும், கொலை செய்யப்பட்டவருக்கும் முன்பகை இருந்ததாகவும், அதனால் திட்டமிட்டு இந்த கொலையை அரங்கேற்றியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)