விரைவில் வருகிறது, ஒரே நேரத்தில் 4 உபகரணங்களில் வாட்ஸ்ஆப் செயலியை இயக்கும் நடைமுறை

ஒரே நேரத்தில் நான்கு உபகரணங்களில் ஒரே வாட்ஸ்ஆப் கணக்கை கையாளும் நடைமுறை விரைவில் வருகிறது. இதற்கான சோதனைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.


இது குறித்த சில தகவல்கள் WABetaInfo-ல் வெளியாகி உள்ளன. ஒரே நேரத்தில் 4 உபகரணங்களில் ஒரே வாட்ஸ்ஆப் கணக்கை இயக்குவதற்காக linked devices என்ற வசதி அளிக்கப்படும்.


அதே நேரம் செல்போனில் இணைய இணைப்பு இல்லை என்றாலும், இணைக்கப்பட்ட லேப்டாப், கணினி போன்ற இதர உபகரணங்களில் வாட்ஸ்ஆப் செயலியை இயக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு போன்களில் இது சோதித்துப்பார்க்கப்பட உள்ளது