சசிகலா சிறைத்துறைக்கு கடிதம்-தன்னை பற்றிய விவரங்களை 3-ம் நபருக்கு தரக்கூடாது

ஆர்.டி.ஐ மூலம் மூன்றாவது நபருக்கு தகவல் அளித்த விவகாரத்தில் சசிகலா தனது அதிருப்தியை சிறைத்துறைக்கு தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் வி கே சசிகலா விடுதலை தொடர்பான கேள்விகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டதற்கு ஜனவரி 21ஆம் தேதி சசிகலா விடுதலை ஆவார் என பெங்களூர் சிறை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் "தன்னுடைய சிறைவாசம் , விடுப்பு மற்றும் விடுதலை குறித்த விவரங்களை மூன்றாவது நபருக்கு தெரிவிக்கக் கூடாது" என சசிகலா கடிதம் எழுதி உள்ளார். மேலும் இந்த கடிதம் தன்னுடைய வழக்கறிஞர் மூலம் தயார் படுத்தப்பட்டது என்றும் இதில் உள்ள ஆங்கிலத்தில் எட்டக்கூடிய அனைத்து விவரங்களும் தனக்கு தமிழில் விளக்க பட்டுள்ளதாகவும் அது அனைத்தும் சரி எனவும் தான் அறிந்து கொண்டதாகவும் அந்த கடிதத்தில் வி கே சசிகலா குறிப்பிட்டுள்ளார்.


சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இவரது தண்டனைக் காலம் விரைவில் முடியவுள்ளதால் தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா