2022 வரை என்னை சிறையில் வைத்திருக்கத் திட்டமிட்டனர்: டாக்டர் கஃபீல் கான் பேட்டி

இந்நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்த கஃபீல் கான், 'நான் வளைந்து கொடுப்பவனல்ல' என்றார். சிறையிலிருந்து விடுதலையானவுடன் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் பேசும்போது, என்னை உ.பி. அரசு குறிவைத்து இலக்காக்கியது, என்னை நிரந்தரமாக சிறையில் வைக்கத் திட்டமிட்டது. ஏனெனில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் குழந்தைகள் பல இறந்ததையடுத்து கேள்விகள் எழுப்பினேன். ஆக்சிஜன் துயரத்தில் 70 குழந்தைகள் பலியானதற்கு எதிராக குரல் எழுப்பினேன்.


டாக்டர் கஃபீல் கான் கொலைகாரர் இல்லை என்றால் அப்போது யார் கொலை செய்தது? என்று கேள்வி எழுப்புகிறேன் என்றார். குடும்பத்துடன் ராஜஸ்தான் செல்கிறார் டாக்டர் கஃபீல் கான். உத்தரப் பிரதேசத்தில் தனக்கு பாதுகாப்பில்லை என்கிறார் டாக்டர் கஃபீல் கான்.


"மும்பையில் என்னைக் கைது செய்த போது, என்னை என்கவுண்டரில் காலி செய்து விடுவார்கள் என்று கூறினேன். அதனால்தான் உத்தரப் பிரதேசத்துக்கு வெளியே சிலகாலம் செலவிட முடிவெடுத்தோம்" என்றார்.


டாக்டர் கான் தாயார் மேற்கொண்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின் போது நீதிபதிகள் கோவிந்த் மாத்துர், நீதிபதி சவ்மித்ர தயால் சிங் ஆகியோர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை இவர் மீது பிரயோகித்தது சட்ட விரோதம் என்று கூறி உடனடியாக வரை விடுவிக்க வேண்டும் என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க உத்தரவிட்டனர்.


சிஏஏவுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதாக தேசியப் பாதுகாப்புச் சட்டம் இவர் மீது பாய்ந்த்து , ஆனால் கஃபீல் கான் கூறுவது என்னவெனில், "டிசம்பர் 12, 2019-ல் நான் சிஏஏ குறித்து உரையாற்றும்போது என்னைக் கைது செய்யவில்லை. கோரக்பூர் ஆக்சிஜன்.


இந்நிலையில் கோவிட்-19 குறித்து கபீல் கான் கூறும்போது, "உ.பி.யில் சுகாதா அமைப்பு உடைந்து போயுள்ளது. நான் ஆரோக்கியம் குறித்து பேசுவேன் என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் என் வாயை அடைக்க அவர்கள் திட்டமிட்டனர். என்னை 2022 வரை சிறையில் வைத்திருக்க திட்டமிட்டதாக நம்புகிறேன்" என்றார் டாக்டர் கஃபீல் கான்.


 


Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
‘நீ செத்துப் போ.. நா வீடியோ எடுக்கற’ : மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்ததை வீடியோ எடுத்த கணவன்!!!
Image
சிக்னலில் நின்ற பெண்ணிடம் பணம் கேட்ட திருநங்கை: தர மறுத்ததால் ஆபாச பேச்சு…முகம் சுழிக்க வைத்த செயல்..!!
Image
தி.மு.க மூத்த தலைவரை பொதுவெளியில் விமர்சித்த நிதி அமைச்சர் #PTR - உச்சக்கட்டத்தில் உட்கட்சி பூசல்! https://kathir.news/news/-ptr--1204682
Image
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்பட அவரது ஆதரவாளர்கள் 11 பேர் மீது வழக்கு
Image