மதுரை அருகே போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் தூக்கில் தொங்கிய விவகாரத்தில் 2 எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் தூக்கில் பிணமாக தொங்கிய விவகாரத்தில் , காவல்துறைக்கு எதிராக கிராம மக்கள் நடத்திய உள்ளிருப்பு போராட்டம் மாலையில் முடிவுக்கு வந்தது.


அணைக்கரைப்பட்டி ரமேஷ் என்ற 21 வயது இளைஞர், வாழைத்தோப்பு மலை உச்சியில் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய படி இறந்து கிடந்தார். காவல் துறை யிடம் நீதி கேட்டும், தமிழக அரசிடம் நிதி உதவி கோரியும் ரமேஷின் குடும்பத்தினர் மற்றும் உறவினர் கள், 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த ஆர்.டி.ஓ உள்ளிட்ட அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால், போராட்டத்தை கைவிட்டு, கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர்கள் ஜெய கண்ணன், பரமசிவம் இருவரும் பணி இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளனர்