காலை சுற்றும் வலைதளம் - ஊதி பெரிதாகப்பட்ட ‘மோடி’ பிம்பம் வெடித்ததன் பின்னணி

இந்திய அளவில் சமூக வலைதளங்களில் சூப்பர் ஸ்டார் என்றால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தான். சமூக வலைதளங்களில் அவரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை மற்றவர்களை விட அதிகம். அவரை பின் தொடர்வோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. சமூக வலைதளத்தில், இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவிலும் அவர் குறிப்பிடத்தக்க இடத்தில் உள்ளார். டிவிட்டரில் உலக அளவில் பதினைந்தாம் இடத்தில் உள்ளார்.


மோடி இந்திய அளவில் புகழ்பெற்றதே, சமூக வலைதளங்கள் மூலமாக தான். அவர் பெரும் சாதனைகள் செய்திருப்பதாக, தொடர்ந்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரப்பியே மோடியின் பிம்பம் ஊதி பெரிதாக்கப்பட்டது. பிம்ப கட்டமைப்பில், செய்யாத செயல்களை எல்லாம் பொய்யாக சித்தரித்து பரப்பினார்கள்.


அதில் ஒன்று தான், சீனாவில் உள்ள ஷாங்காய் பேருந்து நிலையத்தை குஜராத்தில் இருப்பதாக போட்டோ ஷாப் செய்து பரப்பியது. உச்சமான பொய் செய்தி, உத்தர்காண்ட் மாநிலத்தில் கேதார்நாத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 15,000 பேரை மோடி மீட்டார் என்ற கதை தான். 150 பேரை மீட்ட செய்தி இப்படி ஊதி பெரிதாக்கப்பட்டது.


காலம் திரும்புகிறது.. காலை சுற்றும் வலைதளம் - ஊதி பெரிதாகப்பட்ட ‘மோடி’ பிம்பம் வெடித்ததன் பின்னணி? இப்படியாக மோடியின் பொய் சாதனைகள் சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டது. அதன் மூலம் பின் தொடர்வோர் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. பின் தொடர்வோர் எண்ணிக்கை அதிகரித்த அளவு, பதியப்படும் செய்திகளுக்கான விருப்பக் குறி அதிகரிக்கவில்லை. அடுத்து அதற்கான பணி துவங்கியது. மோடியின் சமூக வலைதளங்களை நிர்வகிக்கவும், அதை பிரபலப்படுத்தவும் சில நிறுவனங்கள் பணியமர்த்தப்பட்டன.


'லைக்' எண்ணிக்கையை அதிகரிக்க "பாட்கள்" பயன்படுத்தப்பட்டன. 'பாட்' என்பது ஒரு மென்பொருள். சில நடவடிக்கைகளை மேற்கொள்ள நிரல் படுத்தப்பட்டிருக்கும். இதன் மூலம் மோடி குறித்த செய்திகள் வந்தால், "லைக்" குவியும். மோடி பெயரை தேடும் மென்பொருள், கண்ட உடன் லைக் செய்யும். சமீபத்தில் ஒருவர் ட்விட்டரில் வாக்கெடுப்பு வைத்தார்.


'யார் சிறந்த அழகி?', என்பது கேள்வி. வாக்களிக்க கொடுக்கப்பட்ட வாய்ப்புகளில் இரண்டு நடிகைகள் பெயரும், மோடியின் பெயரும் கொடுக்கப்பட்டிருக்கிறது. வாக்களிப்பு முடிவில் "மோடி தான் சிறந்த அழகி" என அதிக வாக்குகள் வந்திருந்தது. "பாட்" வேலை செய்வதற்கு உதாரணம் இது. பின்னர் இது தெரிந்து மென்பொருள் சீரமைக்கப்பட்டது. காலம் திரும்புகிறது..


காலை சுற்றும் வலைதளம் - ஊதி பெரிதாகப்பட்ட ‘மோடி’ பிம்பம் வெடித்ததன் பின்னணி? இப்படி சமூக வலைதளங்களில் எல்லாவித வழிகளையும் பயன்படுத்தி, உச்சம் தொட்டார் மோடி. பரமபதத்தில் ஏணிகளிலேயே ஏறிக் கொண்டிருந்த மோடியின் இமேஜை, சமீபத்தில் பாம்பு கொத்தி கீழே இறக்க ஆரம்பித்திருக்கிறது. பேச்சையே தன் வலிமைமிக்க ஆயுதமாக கொண்டவர் மோடி.


கிடைக்கும் இடத்தில் எல்லாம் பேசித் தள்ளுவார். உணர்ச்சி பொங்க பேசி மயக்குவார். பாராளுமன்றம், கட்சி பொதுக் கூட்டங்கள், அரசு நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி என பேசிக் கொண்டிருந்தாலும், வானொலி மூலமாகவும் பேசி மக்களை ஏமாற்றினார். அந்த வானொலி பேச்சுக்கு, "மங்கி பாத்" என்று பெயர் சூட்டி அதை கடும் பணி செய்து பிரபலப்படுத்தினார். மோடியின் புகழ் மகுடத்தில் "மங்கி பாத்" ஒரு வைரமாக பார்க்கப்பட்டது, கடந்த வாரம் வரை. அந்த 'மங்கி பாத்'தே மோடிக்கு சறுக்கு மரமாகி விட்டது. பாரதிய ஜனதா கட்சியின் யூடியுப் பக்கத்தில் ஆறு நாட்களுக்கு முன் 'மங்கி பாத்' பேச்சு பதிவேற்றப்பட்டது.


காத்திருந்தது போல், ஓர் கூட்டம் கூடி சம்பவம் செய்து விட்டது. மற்ற சமூக வலைதளப்பக்கங்கள் போல் இல்லாமல், யூடியுபில் 'விருப்பமின்மை குறி' உண்டு. முகநூல் போன்றவற்றில் 'லைக்' இருப்பது போல், இதில் 'டிஸ்லைக்' உண்டு. ஆயிரங்களில் துவங்கிய டிஸ்லைக் லட்சத்தை தொட்டது. நெருப்பை தொட்டது போல் பா.ஜ.க அய்.டி விங் துடித்தெழுந்தது.


லைக் விழ வைக்க பிரயத்தனம் செய்தனர். மீண்டும் டிஸ்லைக் சூடு பிடித்தது. பா.ஜ.கவின் அத்தனை வித்தைகளையும் தாண்டி 12 லட்சம் டிஸ்லைக்குகள் குவிந்து விட்டன. லைக்குகள் 4 லட்சத்து முப்பத்தியெட்டாயிரம் பெற்று பின் தங்கி இருக்கிறது. நடுவில் டிஸ்லைக்குகளை குறைக்கும் வேலையும் நடந்தது. அதையும் கமெண்ட்டில் வெளுத்து எடுத்து விட்டனர் பயனர்கள். காலம் திரும்புகிறது.. காலை சுற்றும் வலைதளம் - ஊதி பெரிதாகப்பட்ட ‘மோடி’ பிம்பம் வெடித்ததன் பின்னணி? 'மங்கி பாத்'துக்கு தான் இந்த கதையா என்றால் அடுத்த மோடி வீடியோவும் டிஸ்லைக்குகளை குவிக்கிறது.


அமெரிக்க - இந்தியா உச்சி மாநாட்டு பேச்சு பா.ஜ.க யூடியூப் பக்கத்தில் பதியப்பட்டது. 13 ஆயிரம் லைக்குகளும், 1 லட்சம் டிஸ்லைக்குகளுமாக படம் வெற்றிகரமாக ஓடுகிறது. பாரதிய ஜனதா கட்சியின் பக்கம் மட்டும் இல்லை, எங்கெல்லாம் மோடியின் பேச்சு பதிவாகிறதோ அங்கெல்லாம் டிஸ்லைக்கில் ஓங்கி குத்தப்படுகிறது. கொரோனா நோய் ஒரு பக்கம், அதன் மூலம் வேலை இழப்புகள் இன்னொரு பக்கம் என நாடு தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், மயிலுக்கு உணவளித்த வீடியோவை வெளியிட்டு மக்கள் கோபத்தை கிளறினார்.


மங்கி பாத்தில் நாய் வளர்ப்பு குறித்து பேசி, மக்கள் கோப நெருப்பில் தன் ஏமாற்றுப் பேச்செனும் பெட்ரோல் ஊற்றி விட்டார் மோடி. பற்றி எரிகிறது மோடியின் பிம்பம். எந்த சமூக வலைதளம் மூலம் மோடியின் பிம்பத்திற்கு அரிதாரம் பூசப்பட்டதோ, அதே வலைதளம் மோடியின் அரிதாரத்தை கலைத்துக் கொண்டிருக்கிறது. ராஜா வேஷம் கலைஞ்சு போச்சு டும்..டும்..டும்.., மங்கிபாத் கலைச்சிடுச்சி டும்..டும்..டும்..! காலம் திரும்புகிறது, காலை சுற்றுகிறது வலைதளம் !


Popular posts from this blog

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு