தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

குமரி மாவட்டம் கடையாலுமூடு பகுதியை சேர்ந்த அபினேஷ் (12) என்ற சிறுவனுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது பெற்றோர் கடையாலுமூடு பகுதியில் இயங்கிவந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வந்தனர்.


ஆற்றலையில் சிறுவன் நேற்று மாலை திடீரென உயிர் இழந்தார். இதைதொடர்ந்து மருத்துவரின் தவறான சிகிச்சையே சிறுவனின் உயிரிழப்புக்கு காரணம் எனவும் தவறான சிகிச்சை அளித்த மருத்துவரை கைது செய்து மருத்துவமனையை சீல் செய்வதுடன் இந்த இறந்த மாணவனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தக்கலை டி. எஸ். பி மற்றும் விளவங்கோடு வட்டாட்சியர், மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் மருத்துவர் ஹோமியோபதி சிகிச்சை நடத்தும் மருத்துவர் என்பதும் அவரும் அவரது மனைவி மேரி ரெத்னாவும் மருத்துவமனையில் சிகிச்சை அளித்ததும் தெரியவந்தது.


இதை தொடர்ந்து அந்த மருத்துவமனையை பூட்டியதுடன் தலைமறைவாக இருக்கும் மருத்துவர் கைது செய்யப்படுவார் என உறுதியளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)