100 படுக்கைகளுடன் லாட்ஜை சிறப்பு சிகிச்சை மையமாக்கி கொரோனா கட்டண கொள்ளை..! வசூல் ஆஸ்பத்திரிக்கு தடை

சேலத்தில் மருத்துவ கவுன்சிலில் பதிவு பெறாத மருத்துவரை கொண்டு கொரோனாவில் இறந்தவர்களுக்கு மருத்துவ சான்று வழங்கியதோடு, கூடுதல் கட்டணம் வசூலித்த பிரியம் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.


கொரோனாவுக்கு சிறப்பு சிகிச்சை என ஒரு லாட்ஜையே வாடகைக்கு பிடித்து லட்சங்களை வசூலிப்பதில் ப்ரியமாக நடந்துகொண்ட வசூல் மருத்துவமனை சிக்கிய பின்னனி குறித்து விவரிக்கின்றது


இந்த செய்தி தொகுப்பு. சேலம் கொண்டலாம் பட்டி பெங்களூர் பைபாஸ் சாலையில் 15 மருத்துவர்கள் கூட்டு சேர்ந்து பிரியம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என்ற தனியார் ஆஸ்பத்திரியை நடத்தி வந்தனர்.


கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அரசின் அனுமதியை பெற்றுள்ள ப்ரியம் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளிடம் அரசு நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் கொரோனா நோயாளிகள் அதிகமாக உயிரிழப்பதாகவும் அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தது.


மாவட்ட சுகாதாரத்துறையில் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரி ஒருவரின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனை என்பதால் அருகில் உள்ள புளூஸ்டார் லாட்ஜையும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக்கி அதிலும் கட்டணம் வசூலித்து வந்ததாக கூறப்படுகின்றது.


ப்ரியம் மருத்துவமனை மீதான புகார் குறித்து விசாரிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், சுகாதாரதுறை இணை இயக்குனர் மலர்விழி தலைமையிலான அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்ட போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை