புரொமோசன் பண்ணுங்க சார்.. 10 ஆண்டுகளாக . கதறும் நூலகர்கள்!

கல்வி கற்பிப்பது, எழுத்தறிவை ஊட்டுவது, கலாச்சாரத்தை காப்பது என மூன்று முக்கிய நோக்கங்களை கொண்டு செயல்படுவது தான் நூலகச்சேவை.


அறிவுக் கூடங்களான நூலகங்களில் பணிபுரியும் நூலகர்கள் பத்து ஆண்டுகளாக 'புரொமோசன் பண்ணுங்க சார்..' என்று கதறுவது தான் அரசின் காதுகளுக்கு கொஞ்சம் எட்ட மறுக்கிறது. என்று வேதனை தெரிவிக்கிறார்கள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரியும் நூலகர்கள்.


இதுகுறித்து நூலகர்கள் கூறியதாவது: சென்னையில் உள்ள கன்னிமாரா நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், 32 மாவட்ட பொது நூலகங்கள், 14 நடமாடும் நூலகங்கள், 1915தகுதி ஊர்ப்புற நூலகங்கள், 745 பகுதி நேர நூலகங்கள் என தமிழகம் முழுவதும் 4,634 நூலகங்கள் இருக்கின்றன. இவற்றில் பணி புரியும் நூலகர்களுக்கு, அடிப்படையில் புரொமோசன், ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.


வைக்கப்பட்டு இருப்பதால், அந்த புரொமோசனை நம்பி குறைந்தளவு சம்பளத்தில் பணிக்கு சேர்ந்த பகுதி நேர நூலகர்கள் மற்றும் ஊர்ப்புற நூலகர்கள் நிலைமை மிகவும் கவலைக்குள்ளானதாக இருக்கிறது. | வழக்கமாகவே பகுதி நேர நூலகர்கள் மற்றும் ஊர்ப்புற நூலகர்களுக்கு ஓரிரு ஆண்டுகளில் புரொமோசன் கிடைக்கும்.


இதனால் நியமிக்கப்படும் நூலகர்களுக்கு உரிய சம்பளம் மற்றும் இன்னபிற சலுகைகளும் கிடைக்கும். ஆனால் இதை எதிர்பார்த்து நூலகர் பணிக்கு சேர்ந்த 1,916 பேர் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் மன உளைச்சலில், புரொமோசனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இதை வலியுறுத்தி தமிழ்நாடு நூலகர் சங்கங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல போராட்டங்களை நடத்தி பார்த்தனர். இப்போது ஒரு கூட்டமைப்பை ஏற்ப்படுத்தி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு ஒரு கோரிக்கையாக அளித்து உள்ள னர்.


இதனையடுத்து இந்த கோரிக்கை வலுத்து வரும் நிலையில், மூன்றாம் நிலைமொத்தத்தில் நூலகர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பல முறை பேட்டியளிக்கையில் தெரிவித்து வருகிறார்.


அவ்வாறு நிரப்பினாலே, ஊர்ப்புற நூலகர்கள் புரொமோசன் பெற்று கிளை நூலகர்களாக உருவாகும் வாய்ப்பு கிடைக்கும் இதன் மூலம் நல்ல சம்பளம் பெற முடியும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இந்தப்பணிகள் நடந்தாலே ஊர்ப்புற நூலகத்தில் பணியிடங்கள் காலியாகி, நூலகம் சார்ந்த நூலகர் பதவிக்கான பட்டப்படிப்புகள் படித்து, பணிவாய்ப்புக்காக காத்திருக்கும் புதிய இளை ஞர் களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.


மூலம் தான் போட்டித் தேர்வுகளுக்கு படிக்கும் இளைஞர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பிஎஸ்., உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு படிக்கும் இளைஞர்கள் புத்தகங்கள் பெற்று வந்தனர். மேலும் ஏராளமான நூலகங்களில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வந்தன. ஆனால் நூலகங்களில் ஏற் ப் ப ட் டு ள் ள காலிப்பணியிடங்கள் காரணமாக, இந்த பயிர்சிகள் அளிப்பதில் சிக்கல் ஏற்ப்பட்டு உள்ளது. இதனால். போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற இளைஞர்களும் மாணவர்களும் பெரும் சிரமப்பட வேண்டி உள்ளது. இந்நிலையில், ஊர்ப்புற நூலகங்களில் உறுப்பினர் எண்ணிக்கை கிளை நூலகங்களுக்கு இணையாக உருவாகி இருப்பதால், அவற்றை எல்லாம் சேர்த்து வைத்து கிளை நூலகங்களாக தரம் உயர்த்தலாமே என்று தெரிவிக்கின்றனர் நூலகர்களில் சிலர்.


இவ்வாறு செய்தாலே ஊர்ப்புற நூலகர் எல்லோருமே கிளை நூலகர் ஆக வாய்ப்பு உள்ளது. நிலைமொத்தத்தில் பள்ளிக்கல்வித்துறை கூடுதல் நிதியை நூலகங்களுக்கு ஒதுக்கி, நூலகங்களை தரம் உயர்த்தவும், நூலகர்களை பதவி உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.


பல்வேறு படிநிலைகளில் பணிபுரியும் நூலகர்கள். எல்லாத்தையும் சிறப்பாக செய்யும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நூலகர்களையும் , நூலகங்களையும் கொஞ்சம் கவனித்தால் நூலகர்கள் மட்டும் இல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள், மாணவமாணவிகள் என பல தரப்பினரும் பயன்பெறுவார்களே...


செய்வாரா அமைச்சர்..? பொறுத்திருந்து பார்ப்போம்... இது போன்ற நூலகங்கள் அதாவது பகுதி நேர நூலகத்தில் இருந்து, ஊர்ப்புற நூலகர் பணியிடம், அதிலிருந்து மூன்றாம் நிலை நூலகர் பணியிடம் பிறகு மாவட்ட நூலகர் பணியிடம் என இந்த பட்டியல் உயருகிறது. இதில் தற்போது, பணி புரியும் நூலகர்கள் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக இருக்கும் பணியிடத்திலேயே தேங்கி கிடக்கின்றனர். பகுதி நேர நூலகர்கள், ஊர்ப்புற நூலகர் பணியிடத்துக்கு புரொமோசன்செய்வாரா அமைச்சர்..? பொறுத்திருந்து பார்ப்போம்...


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்