முகக்கவசம் அணிய மறுக்கும் பயணிகள், விமானத்தில் பயணிக்க தடை..!

விமான பயணத்தின் போது முகக்கவசம் அணிய மறுக்கும் பயணிகள் தடைசெய்யப்படும் பயணியர் பட்டியலில் வைக்கப்படுவார்கள் என விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.


அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், உள்நாட்டு விமானங்களில், பேக் செய்யப்பட்ட உணவு-பானங்களை வழங்கவும், சர்வதேச விமானங்களில் சூடான உணவை வழங்கவும் அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.


கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட விமான சேவைகள் கடந்த மே மாதம் 25 ஆம் தேதி பகுதி அளவு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. ஆனாலும், விமானங்களில் உணவு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.


சர்வதேச விமானங்களில் பயண நேரத்திற்கு ஏற்றவாறு, பேக் செய்யப்பட்ட உணவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.