மீண்டும் சர்ச்சையில் சிக்கும் அமைச்சர் -பின் வாசலில் நுழைந்து சுவாமி தரிசனம்..

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள குறுந்தமடம் கிராமத்தை சேர்ந்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. அதிரடியாகப் பேசுவதில் வல்லவரான இவர், 2011 ஆம் ஆண்டு சிவகாசி தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், செய்தி மற்றும் சிறப்புப் பணிகள் செயலாக்கத் துறை அமைச்சராக பணியாற்றினார்.


தற்போது பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் ராஜேந்திர பாலாஜி, ஆவினில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக அவர் மீது புகார் எழுந்தது.


இதனால் அமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும், ஆவின் முறைகேடுகளை சி.பி.ஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தினர் முதல்வரிடம் வலியுறுத்தினர்.


இதனிடையே, இந்துக்களின் மத வழிபாட்டு தன்மைகளையும் நம்பிக்கைகளையும் இயற்கையான வழிபாடுகளையும் கிண்டல் செய்த போலி போராளிகளுக்கு இன்று நாட்டில் நடக்க கூடிய சம்பவம் ஒரு பாடம்.. ஒரு படிப்பினை..!


இறைவா கிருஷ்ணபரமாத்வே இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் கொரோனோவிடமிருந்து காப்பாற்று” என தனது டுவிட்டர் பக்கத்தில் ராஜேந்திர பாலாஜி பதிவிட்டிருந்தார்.


இந்த சர்ச்சைக்குரிய பதிவு, முதல்வர் மற்றும் அதிமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


இதுபோன்ற அதிரடி பேச்சுகளாலும், சர்ச்சைக் கருத்துகளாலும் தான் மாவட்ட செயலாளர் பதவியை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இழந்ததாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இந்த சூழ்நிலையில், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்காக, கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றுள்ளது.


இவர், கோவில் பின் பக்கம் வழியாக நுழைந்து சுவாமி தரிசனம் செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில், அரசு உத்தரவை அமைச்சரே மீறியுள்ள சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)