துரத்தும் டிக் - டாக்... தடம் மாறிய மனைவி, மகள்... தற்கொலை செய்துகொண்ட கணவன்

திருப்பூரில் டிக்டாக் காதலர்களை தேடி மனைவியும் மகளும் சென்று விட்டதால், அவமானம் தாங்காமல் கணவர் வீடியோ பதிவிட்டு தூக்கிட்டுக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது.


சீனாவின் விஷச்செயலிக்கு அடிமையான தாயார் மற்றும் சகோதரியால் குடும்பமே சிதைந்து 15 வயது சிறுவன் நிர்க்கதியாக தவிக்கும் பரிதாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...


திருப்பூர் பொம்மநாயக்கன்பாளையம் ஒர்க்ஷாப் உரிமையாளர் ரவி . இவரது மனைவி கனகவள்ளி திருமணம் முடிந்து 19 ஆண்டுகால தாம்பத்திய வாழ்க்கைக்கு அடையாளமாக 17 வயதில் ஒரு மகளும் 15 வயதில் ஒரு மகனும் என ரவியின் வாழ்க்கை சந்தோஷமாக சென்றுள்ளது.


அழகு நிலையம் வைத்து நடத்தி வந்த கனகவள்ளி சீனாவின் நாசகர செயலியான டிக் டாக்கிற்கு அடிமையாகி அதன் மூலம் ஈரோட்டைச் சேர்ந்த ஒரு நபருடன் பழகி வந்துள்ளார்.


தனது டிக்டாக் காதலனோடு இரவு பகல் பாராமல் கனகவள்ளி உரையாட, 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்த அவரது மகளுக்கும் டிக்டாக் நோய் தொற்றி இருக்கிறது.


அந்த சிறுமி டிக் டாக் மூலம் ஈரோட்டைச் சேர்ந்த டிப்ளமோ படிக்கும் மாணவனை காதலித்துள்ளார். ஒரே அறையில் தாயும், மகளும் தங்களது காதலர்களோடு செல்போனில் பேசி வந்தது ரவியின் கவனத்துக்கு வந்ததால், இருவரையும் கண்டித்துள்ளார்.


இதனால் ரவி மீது இருவருக்கும் வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சில மாதங்களுக்கு முன் இருவரும் தங்களது காதலர்களோடு தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.


புகாரின்பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் கனகவள்ளியையும் மகளையும் ஈரோட்டில் கண்டுபிடித்து மீட்டு வந்து, அறிவுரைகள் கூறி ரவியிடம் ஒப்படைத்துள்ளனர்.


அதன் பின்னரும் திருந்தாத தாயும், மகளும் மீண்டும் காதலர்களை தேடிச்சென்றுவிட்டதால் போலீஸ் நிலையம் செல்ல அவமானப்பட்டு மனைவியை போனில் அழைத்து சமாதானம் பேசியுள்ளார்.


அதற்கு அவரது மனைவி சொன்ன வார்த்தைகள் அனைத்தும் டிக்டாக் சமூகத்தில் ஏற்படுத்தி ஆகப்பெரும் சீரழிவாக உள்ளது.


மனைவி, மகளோடு சேர்த்து குடும்ப மானமும் போனதாகக் கருதிய ரவி, தனது மகனை பார்த்துக்கொள்ளுமாறு சகோதரிகளுக்கு வேண்டுகோள் விடுத்து, வீடியோ ஒன்றைப் பதிவு செய்துவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.


ரவி தற்கொலை செய்துகொண்டு விட்ட நிலையில், 15 வயதாகும் அவரது மகனின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும் குடும்பத்தில் உள்ள பெண்கள் தான் கண்கள், டிக்டாக் போன்ற விஷசெயலிகளில் மூழ்கி அந்த கண்கள் பழுதானால், குடும்பமே சீரழிந்து போகும் என்கின்றனர் காவல்துறையினர், அதே நேரத்தில் போபால் விஷவாயு பாதிப்பு போல தடை செய்யப்பட்ட பின்னரும் இன்னும் சில ஆண்டுகளுக்கு டிக்டாக்கிற்கு அடிமையான குடும்பங்களில் பாதிப்பு இருக்கும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)