கள்ளக்காதலனுடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொலை செய்த பெண்! கோவிலின் உள்ளே புதைக்கப்பட்ட உடல்!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொலை செய்த பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேவுள்ள வி.ஆண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் மஞ்சுளா(வயது 29). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மஞ்சுளா தனியாக வீட்டில் வசித்து வருகிறார்.


இந்நிலையில் இவருக்கும் பணிக்கன்குப்பத்தை சேர்ந்த கண்ணதாசன்(34) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது.


இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 12-ந்தேதி வேலைக்கு சென்ற கண்ணதாசன் வீடு திரும்பவில்லை. எனவே கண்ணதாசனை காணவில்லை என்று கூறி மஞ்சுளா பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.


இந்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் மஞ்சுளா முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரது செல்போனை சோதனை செய்தபோது வேணுகோபாலசாமி கோவிலில் அர்ச்சகரும், பிரபல ஜோதிடருமான கோபிநாத்(52) என்பவரிடம் அடிக்கடி பேசியுள்ளது தெரியவந்தது.


தொடர்ந்து மஞ்சுளாவிடம் செய்த விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது. கோவில் அர்ச்சகர் கோபிநாத் வீட்டில் வேலை பார்த்து வந்த மஞ்சுளா வீட்டுக்கு வந்தும் கோபிநாத்துடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார்.


இதை கண்ணதாசனுக்கு பிடிக்காததால் மஞ்சுளாவை கண்டித்துள்ளார். இருப்பினும் மஞ்சுளா கேட்காமல் கோபிநாத்துடன் செல்போனில் பேசுவதை தொடர்ந்துள்ளார். இதனால் கோபிநாத்துடன் மஞ்சுளாவுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கண்ணதாசனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.


எனவே கோபிநாத்தின் வீட்டுக்கு சென்று அவரையும், அவரது குடும்பத்தினரையும் கண்ணதாசன் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோபிநாத் கண்ணதாசனை கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.


இதற்கு மஞ்சுளாவும் உடந்தையாக இருந்துள்ளார். அவர்கள் இருவரும் திட்டமிட்டு சமாதானமாக செல்லலாம் என்று கூறி கண்ணதாசனை வேணுகோபாலசாமி கோவிலுக்கு கடந்த 12ம் தேதி அழைத்து வந்துள்ளனர்.


பின்னர் அங்கு இவர்கள் இருவருடன் இன்னும் சிலர் சேர்ந்து கண்ணதாசனை இரும்புக்கம்பியால் அடித்து கொலை செய்துள்ளனர்.


பின்னர் கோவிலில் பூஜை பொருட்கள் வைக்கப்படும் அறையில் பள்ளம் தோண்டி கண்ணதாசனின் உடலை புதைத்தனர். தன் மீது யாருக்கும் சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காக மஞ்சுளா போலீசில் புகார் செய்து நாடகமாடியுள்ளார்.


இதையடுத்து மஞ்சுளா, கோபிநாத் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் வேணுகோபாலசாமி கோவில் பூஜை பொருட்கள் அறையில் புதைக்கப்பட்டிருந்த கண்ணதாசனின் உடலை தாசில்தார் உதயகுமார் முன்னிலையில் தோண்டி எடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த மேலும் சிலரை கைது செய்ய உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)