அமெரிக்காவில் மீண்டும் ஒரு கருப்பின இளைஞன் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு போராட்டம்

அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு நீதி கேட்டு வெள்ளை மாளிகை அருகே நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.


கடந்த சில மாதங்களுக்கு ஜார்ஜ் ஃப்ளாயிட் என்ற கருப்பின இளைஞர் போலீசாரால் கொல்லப்பட்ட காயத்தின் தழும்புகள் ஆறும் முன்பே ஜேக்கப் பிளேக் என்ற மற்றொரு இளைஞரும் கொல்லப்பட்டதால் அங்கு மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.


தலைநகர் வாஷிங்டனில் நடந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ளை மாளிகை நோக்கி அணிவகுத்துச் சென்றனர்.


இதையடுத்து போராட்டக்காரர்களை முன்னேறவிடாமல் போலீசார் தடுத்ததால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.


இதனால் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் தோட்டாக்களால் துப்பாக்கிச் சூடு நடத்தியும் அவர்கள் போலீசார் விரட்டியடித்தனர்.


Popular posts from this blog

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு