போலீஸார் திட்டியதால் விவசாயி தற்கொலை,....

உதகை அருகே கெந்தோரையில் போலீஸார் திட்டியதால் மன உளைச்சலுக்கு உள்ளான விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள கெந்தோரை புதுவீடு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி.


இவரது மகன் சீனிவாசன் (38). இருவரும் விவசாயம் செய்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் தேனாடுகம்பை பகுதியில் மது அருந்திவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் சீனிவாசன் சென்றதாக கூறப்படுகிறது.


அங்கு தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார், சீனிவாசன் மீது வழக்குபதிவு செய்து ரூ.15 ஆயிரம் அபராதமாக கேட்டதோடு, இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. மன உளைச்சலுடன் இருந்த சீனிவாசன், நேற்று காலை அவரதுதோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண் டுள்ளார்.


தகவலின்பேரில் உடலைதேனாடுகம்பை போலீஸார் மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர். இதையறிந்த உறவினர்கள், மருத்துவமனை சவக்கிடங்கு பகுதியில் திரண்டு, போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


தகவலின்பேரில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கு விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு