தடையை மீறி விநாயகர் சிலையை நிறுவினால் நடவடிக்கை : உயர்நீதிமன்றம் நம்பிக்கை


தடையை மீறி விநாயகர் சிலை நிறுவினால் அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


விநாயகர் சதுர்த்தி நாளில் சிலையை தெருக்களில் நிறுவ கூடாது எனக் கூறி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.


இதையடுத்து அரசின் உத்தரவை மீறுவேம் என்று தடையை மீறி சிலைகள் நிறுவப்படும் எனவும் இந்து முன்னணி கட்சியினர் தெரிவித்தனர்.


இதையடுத்து அன்பழகன் என்பவர் சென்னை உயர்நதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.


அதில்,தடையை மீறி சிலை நிறுவப்படும் என இந்து முன்னணியினர் மிரட்டும் தொனியில் பேசி உள்ளனர் எனவும் அவர்கள் மீது நடவடிக்கைஎனவும் வலியுறுத்தி இருந்தார்.


இதை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷாகி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் இதுபோன்ற மிரட்டலில் இருந்து அரசை பாதுகாப்பது நீதிமன்றத்தின் வேலை இல்லை, அரசு உத்தரவு மீறப்பட்டால் அதை தமிழக அரசு கவனித்து கொள்ளும் எனவும் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.


மேலும் விநாயகர் சதுர்த்தியன்று தடையை மீறி சிலை வைக்கவும்,ஊர்வலம் செல்லவும் முற்படுபவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் என உயர் நீதிமன்றம் தெரிவித்தது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)