“டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் பலிகடா ஆக்கப்பட்டனர்”- நீதிமன்றம் கருத்து

டெல்லி நிஜாமுதீனில் நடந்த தப்லீக் ஜமாத் கூட்டத்தில் பங்குபெற்ற 29 வெளிநாட்டவர்கள் மீதான வழக்கை மும்பை உயர்நீதிமன்றத்தின் ஒளரங்காபாத் கிளை ரத்து செய்துள்ளதுடன்,


தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டவர்கள் பலிகடா ஆக்கப்பட்டதாகவும் நீதிபதிகள் தீர்ப்பில் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 29 வெளிநாட்டவர்கள், 6 இந்தியர்கள் உள்பட 35 ஜமாத் உறுப்பினர்கள் மீது கொரோனா பரவலுக்குக் காரணமாக இருந்ததாகக் கூறி மூன்று எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.


மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகர் மாவட்டத்தில் அனுமதியின்றி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் நுழைந்ததாகவும் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், " ஒரு தொற்று அல்லது பேரிடர் நடக்கும் நிலையில், அரசியல்ரீதியாக செயல்படும் அரசு, அதற்கான பலியாடுகளைத் தேட முயற்சி செய்கிறது.


இந்த வெளிநாட்டுக்காரர்கள் அதுபோன்ற பலியாடுகளாக மாற்றப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சூழல்கள் காட்டுகின்றன" என்று குறிப்பிட்டுள்ளனர்.


(கோப்பு புகைப்படம்) ஐவரி கோஸ்ட், கானா, தான்சானியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மனுதாரர்கள் தாக்கல் செய்த மூன்று தனித்தனி மனுக்களை உயர் நீதிமன்றத்தின் ஒளரங்காபாத் அமர்வின் நீதிபதிகள் டி.வி நளவாடே மற்றும் செவ்லிகர் ஆகியோர் விசாரித்தனர்.


விமான நிலையத்தில் முறையாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று இல்லை என உறுதியான பின்பே வெளியே செல்ல தங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் மனுதாரர்கள் தெரிவித்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)