அண்ணாமலை உள்பட பாஜக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

கோவையில் நேற்று ஊரடங்கு விதிகளை மீறியதாக அண்ணாமலை உள்பட பாஜக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்


அண்ணாமலை உள்பட பாஜக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு சமீபத்தில் பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, நேற்று கோவையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார்.


அப்போது, அவருக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தடபுடலாக வரவேற்ப்பு அளித்தனர்.


இந்த நிலையில், ஊரடங்கு விதிகளை மீறி கூடியதாகக் கூறி, அண்ணாமலை, பாஜக கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார், மாநில பொதுச்செயலாளர் ஜி.கே.செல்வகுமார், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநில துணை தலைவர் கனகசபாபதி உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 143, 341, 269, 285 IPC r/w 3 of Epdamic Act ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.