மத்திய அரசு உத்தரவின் படி இன்று முதல் இபாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவிப்பு.

புதுச்சேரியில் இன்று முதல் இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.


தனிநபர் மற்றும் சரக்கு வாகன போக்குவரத்திற்காக மாநிலத்துக்குள்ளும் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான இயக்கத்திற்கும் எந்த தடையும் இருக்க கூடாது என மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டது.


இதை மீறி இபாஸ் போன்ற கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டால் அது உள்துறை அமைச்சக வழிகாட்டுதல்களை மீறுவதாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


இதன் அடிப்படையில் புதுச்சேரியில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்வதற்கும், பிற மாநிலங்களில் இருந்து புதுச்சேரி வருவதற்கு இ-பாஸ் தேவையில்லை என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.


மத்திய அரசின் உத்தரவுபடி புதுச்சேரியில் இன்று முதல் இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.