விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தக்கூடாது-சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை August 20, 2020 • M.Divan Mydeen தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தக்கூடாது-சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கைஅரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் படி விநாயகர் சதூர்த்தி விழாவை கொண்டாட அறிவுறுத்தியுள்ள சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தகூடாது என எச்சரிக்கை செய்துள்ளார். விநாயகர் சதூர்த்தி விழா தொடர்பாக இந்து அமைபினருடன் காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். முன்னதாக, ஆலோசனை கூட்டத்தின் போது இந்து அமைப்பை சேர்ந்த சிலர் தடையை மீறி விநாயகர் சதூர்த்தி விழாவுக்கு ஊர்வலம் நடத்துவோம் என்றனர்.