உத்தரபிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தில்பெஃபானா (fefana) கிராமத்தலைவரால் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர்

உத்தரபிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தில் பத்திரிக்கையாளர் ஒருவர் நேற்று இரவு சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


பெஃபானா (fefana) கிராமத்தைச் சேர்ந்த ரத்தன் சிங் என்பவர் தனியார் செய்தி சேனலில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், அந்த கிராமத் தலைவர் வீட்டில், ரத்தன் சிங் உயிரிழந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றினர்.


விசாரணையில், ரத்தன் சிங்கிற்கும், கிராமத் தலைவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில், அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


தலைமறைவான குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் கடந்த மாதமும் ஒரு பத்திரிக்கையாளர் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.