விநாயகர் சிலை வைப்பதற்கு தடை... மாவட்ட ஆட்சியர் தகவல்...

கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகா முரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கொள்ளை நோயான கரோனா தொற்று உலக அளவில் பரவியுள்ளது.


அதே நேரத்தில் அது இந்தியாவையும், தமிழகத்தையும் பாடாய்படுத்திவருகிறது. இதனால் மாவட்டத்தில் அரசு பிறப்பித்த 144 தடை உத்தரவு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அமலில் உள்ளது.


எனவே அனைத்து சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு கலாச்சார நிகழ்வுகள், சமயக் கல்வி விழாக்கள், கூட்டங்கள், நகர கிராமங்களிலுள்ள கோயில் திருவிழாக்கள், ஊர்வலங்கள் போன்றவைகளுக்கான தடை அமலில் உள்ளது.


வரும் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், இதையொட்டி மாவட்டத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் விதமாக பொது இடங்களில் வழிபாட்டுக்காக விநாயகர் சிலை நிறுவுவதற்கு வழிபாடு செய்தல் விநாயகர் சிலை கரைத்தல் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


பொதுமக்கள் அவரவர் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தற்போது பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து தடை செய்யப்பட்டுள்ளதால் விநாயகர் சிலை செய்பவர்கள் பொது இடங்களில் வைப்பதற்கான விநாயகர் சிலைகளை செய்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.


ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியின்போது பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்த பிறகு அந்த சிலைகளை கடலிலும், குளங்களிலும், ஏரிகளிலும் கொண்டு சென்று தண்ணீரில் கரைப்பது வழக்கம். இந்த விழா இந்த ஆண்டு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)