கர்நாடகம் உள்துறை செயலாளராக ஐபிஎஸ் அதிகாரி ரூபா நியமனம்: சசிகலா வெளிவருவதில் சிக்கல்..

பெங்களூரு: சசிகலா விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஐபிஎஸ் அதிகாரி ரூபா கர்நாடகம் மாநில உள்துறை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


இதன்மூலம் கர்நாடகாவில் உள்துறை செயலாளராக பதவியேற்ற முதல் பெண் என்ற பெருமையை டி.ரூபா ஐபிஎஸ் பெற்றுள்ளார். கர்நாடகம் மாநில அரசு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 13 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், காவல்துறையில் உயர் காவல் அதிகாரிகள் 17 பேரை மாநில அரசு பணி இடமாற்றம் செய்து காவல்துறையை மீண்டும் புதுப்பித்துள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


அதன்படி, ரயில்வே ஐ.ஜி.யாக இருந்த பெண் அதிகாரி ரூபா, மாநில உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலத்தில் அந்த பதவியை ஏற்கும் முதல் பெண்அதிகாரி இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


சிறைத்துறை டிஐஜியாக ரூபா இருந்த போது, சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவிற்கு சிறை விதிகளை மீறி சலுகைகள் அளிக்கப்பட்டதாகவும் சிறையில் இருந்து சசிகலா வெளியே சுற்றித்திரிந்த காட்சிகள் குறித்து விடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி பிரபலமானவர் ரூபா.


இந்த நிலையில் பெங்களூரு ரயில்வேயில் ஐ.ஜி. யாக பணியாற்றி வந்த ரூபா, கர்நாடக மாநில உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது சசிகலா தரப்பினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சசிகலா முன்கூட்டியே சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவது கேள்விக்குறியாக உள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)