ஆட்டோ ஓட்டுனர் டூ மீன் வியாபாரி - வாழ்வை மாற்றிப் போட்டக் கொரோனா காலம்!!


கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு எல்லோரது வாழ்விலும் ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


அது சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் வாழ்வில் என்ன விதமான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.


கொரோனாத் தொற்றால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 22 ஆம் தேதியிலிருந்து பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்தப் பொதுமுடக்கத்தால் அமைப்புச்சாரா தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என பலரும் தங்களது வாழ்வாதரத்தில் பெரும் பிரச்னையை சந்தித்தனர்.


அவர்களில் ஒருவர் தான் சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அருள் ராஜ். சென்னையில் ஆட்டோ ஓட்டி மாதத்திற்கு 15,000 வரை சம்பாதித்துக்கொண்டிருந்த அருள் ஒரு கட்டத்தில் 0 என்ற நிலைக்கு தள்ளப்பட்டக் கதையை அவரே விளக்குகிறார். 


பொது முடக்கம் ஆரம்பமான முதல் 10 நாட்களில் கிடைத்த ஓய்வு என்னை மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல பயம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது. 15 நாட்கள் கழித்து கையில் சுத்தமாக பணமில்லாமல் போனது.


வேறு வழியில்லாமல் ஆட்டோவை வெளியே எடுத்தேன். ஆனால் அது நிலைமையை இன்னும் மோசமாக்கியது. ஆம் காவலர்களிடம் சிக்கி அபாராதம் செலுத்தினேன்.


எனது வீட்டில் மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள் என மொத்தம் ஆறு பேர் என்பதால் வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதே பெரும் சுமையாக இருந்தது. அதன் பின்னர் முதலில் சேமித்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு வாழ்வை நடத்தினோம்.


அதனை தொடர்ந்து வீட்டிலிருந்த நகை, அதற்கு அடுத்த படியாக வீட்டிலிருந்த சின்ன சின்ன பொருட்கள் என அனைத்தையும் விற்றோம். ஜீலை 1 ஆம் தேதி அளவில் எங்களிடம் விற்பதற்கும் ஒன்றுமில்லாமல் போனது.


அந்த சமயத்தில் சில நல்ல உள்ளங்கள் அரிசி, பருப்பு எண்ணெய் முதலியவற்றை வாங்கித்தந்தனர். அதன் மூலம் ஒரு இரண்டு வாரத்தைக் கடத்தி விட்டோம். இதற்கு அடுத்த படியாகத்தான் அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து, ஆட்டோ இயங்க அனுமதி அளித்தது. ஆட்டோ ஓட்ட அனுமதி அளிக்கப்பட்ட போதும், பெரும்பான்மையான ஜனம் இல்லாததால் வருமானமும் இல்லை. ஒரு நாளைக்கு 150 ரூபாய்க்கு ஆட்டோ ஓடினாலே பெரிய விஷயமாக இருக்கும். image அதன் பின்னர்தான் ஏதாவது புதிதாகச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.


சொந்தபந்தங்களிடம் சிறிது உதவியைப் பெற்று, பெரம்பலூர் பகுதியில் ஆட்டோவில் வைத்து மீன் விற்றேன். ஆனால் பெரிதாக வியாபாரம் இல்லை. அதனால் அதனை மக்கள் நடமாடும் நடைப்பாதைக்கு கடையை மாற்றினேன். அங்கே போன பின்பு, நான் கண்ட காட்சி இப்போதும் எனது கண்களில் கண்ணீரை வரவழைக்கும்.


ஆம் எனது அம்மா அங்கு கூவி கூவி மீன் விற்றுக் கொண்டிருந்தார். போதாகுறைக்கு காவலர்களும் அனுமதியின்றி நடைப்பாதையில் மீன் விற்றுக்கொண்டிருந்தமைக்காக அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விட்டனர்.


அதனால் அந்த யோசனையும் கைவிட வேண்டியதாயிற்று. நான் இப்போது ஆட்டோவில் வீதி வீதியாகச் சென்று மீன் விற்பனை செய்து வருகிறேன். நாங்கள் உண்ணும் உணவு என்பது அன்று கிடைக்கும் வருமானத்தை பொருத்தே அமையும். இன்று நான் 300 ரூபாய் சம்பாதித்தால், எனது குடும்பத்திற்கு நல்ல உணவு கிடைக்கும் என்பது பொருள்.


தற்போது வரை ஆட்டோவிற்கான 3 மாத தவணைத் தொகையையும் செலுத்த வில்லை. குழந்தைக்கான பள்ளிக்கட்டணத்தையும் செலுத்த வில்லை.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்