கடனை கேட்டு வீட்டினுள் அமர்ந்து மிரட்டும் மைக்ரோ பைனான்சியர்கள் - சுயஉதவி குழு பெண்கள் புகார்

கோவை செல்வபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுவில் உள்ள 35 பெண்கள் மைக்ரோ பைனான்ஸ் என்ற நுண் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுள்ளனர்.


ஒருவர் 49 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றால், வட்டியுடன் 60 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும், இரண்டு ஆண்டுகளுக்கு வாரம் 600 ரூபாய் செலுத்த வேண்டும் என்ற விதிமுறைகளுடன் கடன் வாங்கியுள்ளனர் சரியாக கடன்தொகையை திருப்பி அளித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக ஊரடங்கு காரணமாக போதிய வருமானமின்றி தவிப்பதாக கூறும் பெண்கள், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதியாக அறியப்படும் செல்வபுரத்தில் இருந்து வேலைக்கு செல்வதிலும் சிரமம் உள்ளதாகவும் கூறுகிறன்றனர்.


தங்கள் சூழலை புரிந்து கொள்ளாமல் கடனை கட்ட சொல்லி மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தினர் நெருக்கடி தருவதாக மகளிர் சுய உதவிக்குழுவினர் புகார் தெரிவித்துள்ளனர்.


கடன்களை உடனே திருப்பி செலுத்த வலியுறுத்தி ஆட்கள் வீட்டினுள் அமர்ந்து மிரட்டுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


ஊரடங்கு காரணமாக அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டு இருப்பதால் கொரோனா தொற்று குறையும் வரை கடன் செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் மகளிர் குழுவினர் வலியுறுத்தினர். கோவை மாவட்ட ஆட்சியரிடமும், காவல் துறையினரிடமும் மகளிர் சுய உதவி குழுவினர் புகார் தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பாக நிறுவனத்தை தொடர்புகொண்டபோது, மகளிர் சுய உதவிக்குழுவினர் அளித்துள்ள குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளிக்க மறுத்துவிட்டனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)