நகைகளை திருடி காதலிக்கு பரிசு கொடுத்த சிறுவன் – சென்னையில் சிக்கிய சிறுவர்கள் கூட்டம்

சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் முருகன் (30). இவர் மார்ச் மாதம் 8-ம் தேதி வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த 3 சிறுவர்கள், 3 சவரன் தங்க நகை, ஒரு செல்போன், ரூ.2,000 ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.


இதுகுறித்து முருகன் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா உத்தரவின்பேரில் எம்.கே.பி நகர் உதவி கமிஷனர் கோ.அரிகுமார் மேற்பார்வையில் கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ், தனிப்படையைச் சேர்ந்த எஸ்.ஐ-நித்யானந்தம், காவலர்கள் மணிவண்ணன், மரியதாஸ், சத்யமூர்த்தி ஆகியோர் கிருஷ்ணமூர்த்தி நகருக்குச் சென்று சம்பவம் நடந்தன்று சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.


அப்போது 3 சிறுவர்கள் வீட்டுக்குள் நுழையும் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.அந்த சிறுவர்களை போலீஸார் தேடிவந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஆங்காங்கே போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போது ஒரே பைக்கில் மூன்று பேர் வந்தனர் அவர்களிடம் போலீஸார் விசாரித்தபோது அவர்கள் செல்போன், நகை திருட்டில் ஈடுபவர்கள் எனத் தெரியவந்தது.


முருகன் வீட்டில் நகை, செல்போன் ஆகியவற்றை திருடியதை ஒப்புக் கொண்டனர். கைது செய்யப்பட்ட 3 சிறுவர்களும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர். திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று சிறுவர்களும் ஒரே பள்ளியில் 7, 8, 9-ம் ஆகிய வகுப்புகள் ஒன்றாக படித்துள்ளனர். அதனால் அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டுள்ளது. பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய மூன்று பேரும் செல்போன் பறிப்பு, நகை திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.


மூன்று சிறுவர்கள் இதுவரை 20 செல்போன்களைத் திருடியுள்ளனர். திருடிய செல்போன்களை குறைந்த விலைக்கு விற்று கஞ்சா வாங்கியுள்ளனர். முருகன் வீட்டில் திருடிய நகைகளையும் செல்போனையும் மூன்று சிறுவர்களில் ஒருவன் தன்னுடைய காதலிக்கு அன்பு பரிசாக கொடுத்துள்ளார்.


சிறுவனின் காதலியிடம் போலீஸார் விசாரித்தபோது நகைகள், செல்போன் கொடுத்தது உண்மைதான். ஆனால் அதன்பிறகு அதை அவன் வாங்கிக் கொண்டான் என்று கூறியுள்ளார். மூன்று சிறுவர்களிடமிருந்து 20 செல்போன்கள், தங்கச் செயின், வெள்ளி கைச்செயின் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு