சட்ட ஆலோசனையை பொறுத்து எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை - சென்னை காவல்துறை ஆணையர்

சென்னை புதுப்பேட்டை ராஜரத்தினம் மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்காக ஆவின் பார்லரை இன்று மாலை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் திறந்து வைத்தார்.


பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த காவல் ஆணையர் சென்னையில் சுதந்திர தினத்தையொட்டி 15,000 காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளதாகவும் விடுதிகள் மற்றும் வாகன சோதனை சாவடி அமைத்து தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தார்.


மேலும், முதல்வர் பற்றி அவதூறு பரப்பும் வகையில் பேசிய பாஜக நிர்வாகி எஸ்.வி சேகர் மீது புகார் வந்துள்ளதாவும் சட்ட ஆலோசனைக்கு அனுப்பபட்டுள்ளதாகவும் அதன் அறிக்கையின் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாகவும் அவர் கூறினார்