அமேசான் மீது நம்பிக்கையில்லை என இந்திய ஆன்லைன் விற்பனையாளர்கள் புகார்

அமேசான் நிறுவனம் மீது நம்பிக்கையில்லை என இந்திய ஆன்லைன் விற்பனையாளர்கள் 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புகார் தெரிவித்துள்ளனர்.


அமெரிக்க நிறுவனமான அமேசான் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டும் ஆதரவாக செயல்படுவதாகவும், அந்த நிறுவனங்களுக்கு அமேசான் வாரி வழங்கும் சலுகைகளால், தன்னிச்சையாக தொழில்புரியும் விற்பனையாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


உற்பத்தியாளர்களிடம் இருந்து மொத்தமாக பொருட்களை வாங்கும் அமேசான், குறிப்பிட்ட விற்பனையாளர்களுக்கு மட்டும் மிகக்குறைந்த விலையில் நஷ்டத்துக்கு பொருட்களை விற்பனை செய்வதாகவும், இதனால் அந்த வணிகர்கள் அமேசானுக்கு தாரளமாக சலுகைகளை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ள வணிகர்கள், இதனால் தங்கள் வணிகம் பாதிக்கப்படுவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.


ஏற்கனவே ஜனவரி மாதத்தில் போட்டி விதிகளை மீறி, அளவுக்கதிமான சலுகைகளை வழங்கியதாக எழுந்த புகாரில் அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களை இந்திய போட்டிகள் ஆணையம் விசாரித்த நிலையில், தற்போதைய புகாரால் அமேசானுக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா