வேறொருவரின் உடலை அடக்கம் செய்த உறவினர்கள் - இறந்ததாகக் கருதப்பட்ட நபர் வீடு திரும்பினார்

உத்தரபிரதேசத்தில் உறவினர் இறந்து விட்டதாகக் கருதி வேறொரு நபரின் உடலை உறவினர்கள் அடக்கம் செய்த நிலையில், சம்பந்தப்பட்ட நபரே 2 நாட்களுக்கு பிறகு உயிருடன் வீடு திரும்பினார்.


சக்ரி அருகே ஓம்பூர்வா என்ற இடத்தில் வசித்து வருபவர் அகமது ஹசன், கடந்த 2ம் தேதி மனைவியுடன் சண்டையிட்டு அவர் வீட்டை விட்டு வெளியேறினார். அவரைக் காணாமல் போலீசில் உறவினர்கள் புகார் அளித்தனர். அன்று மாலையே எரிந்த நிலையில் கிடந்த சடலத்தை அகமதுவின் உறவினர்கள் அது அகமது ஹசன்தான் எனத் தவறாக அடையாளம் காட்டினர்.


இதையடுத்து அந்த உடலை எடுத்துச்சென்று அடக்கமும் செய்தனர். இந்நிலையில் கோபம் தணிந்து அகமது ஹசன் அண்மையில் வீடு திரும்பினார். இந்தச் சம்பவம் குறித்து அறிந்த போலீசார், இறந்த சடலம் யாருடையது என புதிதாக விசாரணையை நடத்தி வருகின்றனர். மேலும், இறந்த உடலின் டிஎன்ஏ பரிசோதனை செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.


Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
அடி..வாட்டர் பாட்டில் ...முதுகில் குத்து.. டயர் பஞ்சர் : கூட்டத்தில் வைத்து OPS-ஐ தாக்கிய கும்பல்
Image
முதியோர்களின் மக்கள் தொகை உருவாக்கும் சவால்களை எதிர்கொள்ள அரசாங்கமும், சிவில் சமூகமும் போராடுகின்றன.
Image
முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்
Image
ஆர்டர்லிகளை உடனே திரும்பப் பெற வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
Image