மத்திய அரசு அவசியமில்லை என தெரிவித்த பிறகும் இ-பாஸ் முறையை தொடர்வது ஏன்? தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

மத்திய அரசு அவசியமில்லை என தெரிவித்த பிறகும் இ-பாஸ் நடைமுறையை தொடர்வது ஏன் என விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


இது தொடர்பாக தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவையை சேர்ந்த விஸ்வரத்தினம் என்பவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்கு எழுதிய கோரிக்கை கடிதத்தில், மத்திய அரசே அவசியமில்லை என தெரிவித்த பிறகும் தமிழக அரசு இ-பாஸ் முறையை தொடர்வதால், மோசடிகளும் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.


இதனால் மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வதற்கான தனிமனித உரிமை தடுக்கப்படுவதாகவும், இது மனித உரிமை மீறல் என்பதால் உடனடியாக இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.


இந்த கடிதத்தை வழக்காக விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணையம் தமிழக தலைமை செயலாளர் 4 வாரத்தில் விளக்கமளித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.