அரியர்ஸ் டூ ஆல்பாஸ்.. என்னவாகும் எதிர்காலம்..

அரியர் மாணவர்களும் ஆல் பாஸ் என்ற தமிழக அரசின் அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்க, அவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலம் எப்படி அமையும் என்பது குறித்து விளக்குகிறது


இந்த செய்தி தொகுப்பு... கொரோனா பரவல் அச்சம் காரணமாக தமிழகத்தில் கலை கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் என அனைத்துவிதமான கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களும் அரியர் தேர்வுக்கான பணத்தை கட்டி இருந்தாலே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.


இதனால் 30 அரியர்கள் வைத்துள்ள மாணவர்களுக்கும் கூட ஒரே கையெழுத்தால் அவர்களின் தலையெழுத்தே மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.


கொரோனா புண்ணியத்தால் அவர்கள் டிகிரி பெற்றுவிடுவார்கள் என்றாலும் வேலை கிடைக்குமா என்பதில் பெரிய சந்தேகம் நிலவுவதாக பேச்சுக்கள் எழுந்துள்ளன.


கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு மாணவர்களின் திறமை குறித்த ஆய்வுகளும், சோதனைகளும் நுட்பமாக நடைபெறும் என நவீன் கன்ஸ்டிரக்ஷன்ஸ் நிர்வாக இயக்குனர் குமார் கூறுகிறார்.


சரியான முறையில் படித்து தேர்ச்சி பெறாத மருத்துவரிடம் மருத்துவம் பார்ப்பது எப்படிப்பட்ட பின் விளைவுகளை ஏற்படுத்துமோ, அப்படிப்பட்ட பின் விளைவுகளை தான் இவர்களை வேலைக்கு சேர்த்தால் ஏற்படும் என்கிறார் அகில இந்திய உற்பத்தியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர்..


மதிப்பெண்கள் மட்டுமே ஒரு மாணவரின் திறமையை தீர்மானித்து விட முடியாது என்றும் நிறுவனங்கள் நடத்தக்கூடிய தகுதித் தேர்வில் அவர்கள் செயல்படும் விதத்தைப் பொறுத்து வேலை வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


முன்னேறத் துடிக்கும் மாணவர்கள் அரசின் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் திறமையை மேலும் வளர்த்துக் கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என ஐசிடி அகாடமியின் தலைவர் அன்புத்தம்பி கூறுகிறார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா