ஆதார் அட்டையை பயன்படுத்தி மூன்றே நாட்களில் ஜிஎஸ்டி பதிவு பெறும் வசதி

ஆதார் அட்டையை பயன்படுத்தி மூன்றே நாட்களில் ஜிஎஸ்டி பதிவு செய்யும் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.


புதிதாக தொழில் தொடங்குவோர் எவ்வித சிரமமும் இன்றி ஜிஎஸ்டி பதிவு பெறும் வகையிலும், போலி நிறுவனங்களை தவிர்த்து வரிசெலுத்தும் முறையை எளிதாக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கடந்த 21ம் தேதி அறிவிக்கப்பட்ட இந்த புதிய வசதியின் படி, வரி செலுத்துவோர் ஆதார் மூலம் பதிவு செய்தால், மூன்றே வேலைநாட்களில் பதிவு செய்யப்பட்டு விடும். மேலும் physical verification எனும் நேரடி சரிபார்ப்பும் தேவையில்லை.


அதே போல் ஆதார் மூலம் பதிவு செய்ய விருப்பமில்லை என்றால், தொழில் செய்யும் இடம், நேரடி சரிபார்ப்பும் முடிந்த பின்பு 21 வேலை நாட்களில் ஜிஎஸ்டி பதிவு பெற முடியும்.