தொழில் உரிமம் புதுப்பிப்பு, வரிவசூலிப்பு பணிகளை மீண்டும் துவங்க சென்னை மாநகராட்சி திட்டம்..

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் தொழில் வரி மற்றும் தொழில் உரிமம் வசூலிக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.


இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் தொழில் வரி மற்றும் தொழில் உரிமம் வசூலிக்கும் பணியை மீண்டும் தொடங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.


சென்னையில் மொத்தம் 1.65 லட்சம் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் பணிபுரியும் தொழிலாளர்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.400 கோடி தொழில் வரி சென்னை மாநகராட்சிக்கு கிடைத்தது.


மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் சென்னையில் பல்வேறு நிறுவனங்கள் தொழில் வரியை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனவே கடந்தாண்டு நிலுவையில் உள்ள தொழில் வரி மற்றும் வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்யதுள்ளது.


இதன்படி 2019 - 20202 நிதியாண்டில் இரண்டாவது அரையான்டுக்கான தொழில் வரி செலுத்தாத நிறுவனங்களிடமிருந்து மட்டும் தொழில் வரி வசூலிக்கப்படும்.


இதைப்போன்று தொழில் புதுப்பிக்கும் பணியும் தொடங்கப்படவுள்ளது. சென்னையில் மொத்தம் 75 ஆயிரம் தொழில் உரிமங்கள் உள்ளன. கொரோனா பாதிப்பால் கடந்த சில மாதங்களாக தொழில் நிறுவனங்கள் உரிமங்களை புதுப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இவ்வாறு இந்த காலக்கட்டத்தில் சென்னையில் உள்ள 7 ஆயிரம் நிறுவனங்கள் தொழில் உரிமங்களை புதுபிக்காமல் உள்ளன.


எனவே இந்த நிறுவனங்கள் எந்தவித அபராதத் தொகையும் இன்றி உரிமங்களை புதுப்பித்து கொள்ளலாம். இதற்கான பணியும் விரைவில் தொடங்கப்படும் என்று சென்னை மாநகராட்சியின் வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.