ரஷியாவில் ஆற்றில் மூழ்கி தமிழக மாணவர்கள் நால்வர் உயிரிழப்பு - உடலை இந்தியா கொண்டு வர பெற்றோர்கள் கோரிக்கை

தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் ரஷ்யாவின் Volgograd பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்துவருகின்றனர்.


10-க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் வால்கா நதிக்கரைக்கு சென்றபோது, நீரில் அடித்துச் செல்லப்பட்ட சக தமிழக மாணவரை காப்பாற்றும் முயற்சியில் மேலும் 3 மாணவர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.


4 பேரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். அவர்கள் சென்னையைச் சேர்ந்த ஸ்டீபன், தாராபுரத்தைச் சேர்ந்த முகமது ஆஷிக், திட்டக்குடியைச் சேர்ந்த ராமு விக்னேஷ், சேலம் மாவட்டம் தலைவாசலைச் சேர்ந்த மனோஜ் ஆகியோர் என தெரியவந்தது.


கொரோனா காலம் என்பதால், 4 பேரின் உடலை விரைவாக தமிழகம் கொண்டுவர இந்திய தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.