வாழ்வாதாரம் இழந்த ஓட்டுநர்.. ஆட்டோவையே வடை கடையாக மாற்றியவருக்கு குவியும் பாராட்டு..

கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த ஆட்டோ ஒட்டுநர் ஒருவர் தன்னுடைய ஆட்டோவை வடை கடையாக மாற்றி வியாபாரம் செய்து வருகிறார்.


மதுரை கோச்சடை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாலகிருஷ்ணன். இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர் கோச்சடை பகுதியில் கடந்த 15 வருடங்களாக ஆட்டோ ஓட்டி அதன் மூலம் வருவாய் ஈட்டி வந்தார். இந்நிலையில் தற்போது கொரானா பொது முடக்கத்தால் பொதுப்போக்குவரத்துக்கு மூன்று மாதங்களுக்கு மேல் தடை விதிக்கப்பட்டிருந்தது.


5-ஆம் கட்ட ஊரடங்கில் ஆட்டோக்களை இயக்க அரசால் அனுமதி அளிக்கப்பட்டது. ஆட்டோக்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டாலும், கொரோனா வைரஸ் அச்சத்தால் பொதுமக்கள் ஆட்டோ மற்றும் வாடகை வாகனங்களில் பயணம் மேள்கொள்வதை தவிர்த்து வருகின்றனர். இதனால் முறையான வருமானமின்றி ஆட்டோ ஓட்டுநர்கள் தவித்து வருகின்றனர்.


இந்நிலையில் பாலசுப்பிரமணியன் ஆட்டோ ஓட்டுவதை நிறுத்திவிட்டு, ஆட்டோவை வடை கடையாக மாற்றி நான்கு வடை 10 ரூபாய் என விற்பனையில் ஈடுபட்டுள்ளார். ஆட்டோவில் அடுப்பு, வடை சுடும் பாத்திரம், வடைகளை வைக்க கண்ணாடிப்பெட்டி என சவாரி ஆட்டோவை முழுமையான வடை கடையாக மாற்றி தற்போது அதன்மூலமே வருவாய் ஈட்டி வருவதாகவும் தெரிவிக்கிறார்.


கொரோனாவால் ஆட்டோ சவாரி கிடைக்காத சூழலிலும் மாற்றி யோசித்து தனது ஆட்டோவை வடை கடையாக மாற்றி வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் பாலகிருஷ்ணனை அப்பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர். இது குறித்து பேசிய பாலகிருஷ்ணன் 15 வருடங்களாக ஆட்டோ ஓட்டினாலும் எனக்கு ஹோட்டல் தொழிலும் தெரியும். கொரோனா காலகட்டத்தில் ஹோட்டல் ஒன்றை வைத்த நிலையில், பொதுமக்கள் வெளியில் சாப்பிட அஞ்சுகின்றனர்.


இதனால் ஹோட்டலையும் மூடிவிட்டேன். எனவே எனது ஆட்டோவையே கடையாக்கி தற்போது அதன் மூலம் 500 ரூபாய் வரை வருவாய் ஈட்டுகிறேன். அரசு விரைவில் கொரோனா ஏற்படுத்திய பொருளாதார பிரச்சனையில் இருந்து மக்களை காக்க வேண்டும் எனவும் அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)