தஞ்சையில் சாலையோரம் காயத்துடன் உணவின்றி தவித்த மூதாட்டியை போலீசார், மருத்துவமனையில் சேர்த்தனர்

தஞ்சை பாலாஜிநகர் அருகே சாலையோரம் சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சேலை கிழிந்து அறைகுறை ஆடையுடன் இரவு, பகலாக உணவின்றி கிடந்தார். இதை பார்த்த சிலர், தஞ்சை மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.


அதன்பேரில் அந்த மூதாட்டியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்கும்படி போலீசாருக்கு இன்ஸ்பெக்டர் சந்திரா அறிவுறுத்தினார். உடனே போலீஸ்காரர்கள் தீபா, பூமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.


அப்போது மூதாட்டியின் உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. இதைபார்த்த போலீசார் அவரை காப்பகத்தில் சேர்க்க முடியாது என்ற தகவலை இன்ஸ்பெக்டரிடம் தெரிவித்தனர். அவர், 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்ததுடன், மூதாட்டியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க வேண்டும் என போலீசாரிடம் தெரிவித்தார்.


சிறிதுநேரத்தில் 108 ஆம்புலன்ஸ் வந்தது. அதில் மூதாட்டியை ஏற்றி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மூதாட்டியுடன் பெண் போலீசாரும் சென்றனர். அங்கு அவர்களே ஆம்புலன்சில் இருந்து மூதாட்டியை கீழே இறக்கி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூதாட்டி யார்?


எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. கொரோனா தொற்று காலத்தில் மூதாட்டியை மருத்துவமனையில் கொண்டு சேர்த்த மகளிர் போலீசாருக்கு பாராட்டு குவிந்து வருகிறது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்