எஸ்.பி.பி நலம் பெற... கூட்டுப் பிரார்த்தனை.!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணமடைய வேண்டி, திரையுலகினர் காணொலி காட்சி மூலம் கூட்டு பிரார்த்தனை மேற்கொண்டனர்.


இயக்குநர்கள் பாரதிராஜா,ஆர்.வி. உதயமார், கங்கை அமரன், நடிகர்கள் சிவக்குமார், பிரபு, பார்த்திபன், சரத்குமார், சத்யராஜ், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இசையமைப்பாளர்கள் தேவா, தீனா, பாடலாசிரியர் வைரமுத்து, பாடகர்கள் மனோ, சித்ரா உள்ளிட்ட பலர் அதில் கலந்து கொண்டனர்.


எஸ்பிபியின் பாடல்களை பாடியதுடன், அவருடனான நினைவுகளையும் பலர் பகிர்ந்து கொண்டனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் எஸ்பிபி குணமடைய வேண்டி ரசிர்கர்கள் பிரார்த்தனை செய்தனர்.