இந்து கோவிலை பாதுகாத்த இஸ்லாமியர்கள்” : பெங்களூரு கலவரத்தின் அதிர்ச்சி பின்னணி!


கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள புலிகேசி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசமூர்த்தி. காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவான சீனிவாசமூர்த்தி தற்போது காவல்பைர சந்திரா என்ற பகுதியில் வசித்து வருகின்றார்.


இந்நிலையில் இவரது உறவினர் நவீன் குமார் என்பவரின் முகநூல் பக்கத்தில் ஒரு சமூக மக்கள் குறித்து அவதூறு பரப்பும் நோக்கில் கருத்து பதிவிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் பெரிய அளவில் ஆனதும் பதிவு நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், தனது முகநூல் கணக்கு ஹேக் செய்யப்பதாக நவீன் கூறியிந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சில குழுக்கள் கோபமடைந்து எம்.எல்.ஏ வீட்டின் முன்பு திரண்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலிஸார் கூறிவந்த நிலையில், தீடிரென அங்கிருந்தவர்கள் எம்.எல்.ஏ வீட்டின் முன்பிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார்கள்.


மேலும், இரண்டு கார்களுக்கும் தீ வைக்கப்பட்டது. “கலவரத்தின் போது இந்து கோவிலை பாதுகாத்த இஸ்லாமியர்கள்” : பெங்களூரு கலவரத்தின் அதிர்ச்சி பின்னணி! தொடர்ந்து வன்முறை பெரும் கலவரமானதையடுத்து, 150க்கும் மேற்பட்ட போலிஸார் காவல்துறை ஆணையர் எஸ்.டி ஷரனப்பா தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.


ஆனால் தீயைணைக்க சென்ற தீயணைப்பு வாகனங்களை தடுத்து நிறுத்திய கலவரக்காரர்கள் அந்த வாகனத்தையும் சேதப்படுத்தி உள்ளே அனுமதிக்கவில்லை.


மேலும், வாகனங்களின் டயர்களை தீயிட்டு கொளுத்தி ஆங்காங்கே வீசிச் சென்றுள்ளனர். இதனால் புலிகேசி நகர், பாரதி நகர், கமர்ஷியல் தெரு, தன்னேரி பகுதிகள் பெரும் கலவர பூமியாக காட்சியளித்தது. அதுமட்டுமின்றி, டி.ஜே ஹள்ளி காவல்நிலையத்தின் முன்பிருந்த வாகனத்திற்கும் தீ வைக்கப்பட்டடுள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் இருந்த போலிஸார் மீது கற்கள் பாட்டில்களை கலவரக்காரர்கள் வீசியதால் போலிஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்க முயற்சித்தனர்.


ஆனால், கூட்டத்தில் இருந்தவர்கள் கலைந்து போகாததால் போலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர். மேலும் கலவரத்தின் போது போலிஸார் உட்பட 60 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே கலவரக்காரர்கள் சாலையோரக் கடைகள், வாகனத்தை அடித்து நொருக்கி சேதப்படுத்துவதாக தகவல் வெளியானதையடுத்து, புலிகேசி நகரைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், அப்பகுதியில் உள்ள இந்து கோவில் ஒன்றை சுற்றி நின்று மனித சங்கிலி அமைத்து பாதுகாப்பில் ஈடுபட்டன. இஸ்லாமியர்களின் இந்த மனித சங்கியைக் கண்ட கலவரக்காரர்களில் சிலர் அவர்களுடன் உடன் நின்றி இந்து கோவிலை பாதுகாத்தனர்.


இந்த சம்பவம் போலிஸார் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து 5 மணி நேரப்போராட்டத்திற்கு பிறகு நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கலவரம் தொடர்பாக பேசிய புலிகேசி நகர் எம்.எல்.ஏ சீனிவாசமூர்த்தி, “இது சில சதிகாரர்களின் வேலை.


அவர்கள் நிலைமையை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வன்முறையை தூண்டிவிட்டுள்ளனர். காவல்துறையினரும், அரசும் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மக்களும் அமைதியாக கடைபிடிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். மேலும் பெங்களூரு நகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்