”ஊராட்சி மன்றத்தலைவர் சரிதா” என எழுதினால் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார்கள் - பட்டியலின ஊராட்சிமன்றத் தலைவர் புகார்..


கோவை மாவட்டம் ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவரான பட்டியலினத்தைச் சேர்ந்த சரிதா, பாகுபாட்டுக்கு உள்ளாவதாகவும், கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும்


கோவை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பட்டியலின வகுப்பை சேர்ந்தவர் என்பதால் அலுவலகத்தில் உட்கார விடாமல் கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் மிரட்டுவதாக புகார் அளித்திருக்கும் சரிதா, ”ஊராட்சி எல்லையில் உள்ள தகவல் பலகை, ஊராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் " ஊராட்சி தலைவர் சரிதா " என்ற பெயரை எழுதவிடாமல் தடுக்கிறார்கள்” எனவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.


ஊராட்சி மன்ற நாற்காலியில் உட்கார்ந்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் புகார் மனுவில் சரிதா தெரிவித்துள்ளார். ஊராட்சி மன்ற தலைவர் சரிதாவின் புகார் குறித்து கோவை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.