விதிமுறைகளை மீறி கூடுதல் கட்டடம் கட்டப்பட்டதாக சென்னை சில்க்ஸ் கடைக்கு சீல்!

தூத்துக்குடியில் விதிமுறைகளை மீறி கூடுதல் மாடி கட்டிய புகாரில் சென்னை சில்க்ஸ் கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.


தூத்துக்குடி வி.இ. சாலையில் செயல்பட்டு வரும் சென்னை சில்க்ஸ் மற்றும் அதன் சார்பு நிறுவனமான ஸ்ரீ குமரன் கடைகளில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.


இந்நிலையில் கட்டடத்தில் கூடுதலாக 2 மாடி கட்டப்பட்டதாகவும், பின்பகுதியில் உள்ள இடத்தில் அனுமதியின்றி சூப்பர் மார்க்கெட் வைத்ததாகவும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.


இதை தொடர்ந்து இன்று காலை சென்னை சில்க்ஸ் கட்டடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், கட்டடத்திற்கான குடிநீர் இணைப்பையும் அதிகாரிகள் துண்டித்தனர்.