”அன்று மாணவி இன்று ஐஏஎஸ்” - கெத்துக் காட்டிய மாற்றுத்திறனாளி பூரண சுந்தரி


 


அண்மையில்வெளியான சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளியான பூரண சுந்தரி தான் படித்த பள்ளியில் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தினத்தைக் கொண்டாடினார். 


அண்மையில் 2019 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளியான பூரணிசுந்தரி என்பவர் தேர்வில் 286 இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றார்.


இந்நிலையில் நாடு முழுவதும் இன்று 74 வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், பூரணி சுந்தரி தான் படித்த பள்ளியான மதுரை காளவாசல் பிள்ளைமார் சங்க மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி சுதந்திரத்தினத்தைக் கொண்டாடினார்.


அதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் அவருக்கு மாணவ - மாணவிகள் சார்பில் பாராட்டு விழாவும் நடைபெற்றது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)